பிரதான செய்திகள் விளையாட்டு

முத்தரப்பு இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது

சிம்பாப்வேயிற்கு எதிரான 2-வது இருபதுக்கு இருபது போட்டியில் வெற்றிபெற்று பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.   சிம்பாப்வே, அஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் சிம்பாப்வேயில்; நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இன்று நடைபெற்ற போட்டியில் சிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2-வது முறையாக போட்டியிட்ட நிலையில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் களத்தடுப்பினை தெரிவு செய்தது. இதனையடுத்து துடுப்பெடு;தாடிய சிம்பாப்வே 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 163 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.