Home உலகம்ஐஎஸ் அமைப்பின் தலைவரது மகன் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளார்.

ஐஎஸ் அமைப்பின் தலைவரது மகன் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளார்.

by admin


ஐஎஸ் அமைப்பின் தலைவரது மகன் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரிய அரச படைகள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதியின் மகன் கொல்லப்பட்டுள்ளார் எனவும் கொல்லப்பட்ட குதபா அல் பத்ரி ஐஎஸ் அமைப்பில் சிறந்த வீரராக இருந்துள்ளார் என்பதுடன் சிரியா மற்றும் ரஸ்யப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளார் என ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது

முன்னதாக சிரியாவின் ராக்கா அருகே கடந்த ஆண்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் ஐஎஸ் அமைப்பின் 30 முக்கிய தளபதிகளும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த 300க்கும் மேற்பட்டோலும் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐஎஸ் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் அபு பக்கர் அல் பாக்தாதியும் கொல்லப்பட்டுள்ளதா ரஸ்யாவும், அமெரிக்காவும் தெரிவித்திருந்த போதும் குர்திஷ் படையினர் இதனை மறுத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது அல் பாக்தாதியின் மகனும் கொல்லப்பட்டிருப்பதாக ஐஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More