இலங்கை பிரதான செய்திகள்

1,248 மில்லியன் ரூபா பெறுமதியான 103 கிலோ 950 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது..

களுபோவில மற்றும் பத்தரமுல்ல பகுதியில் வைத்து ஹெரோயினுடன் இருவர் காவற்துறைப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 1,248 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று இரவு களுபோவில, பிரதிபிம்பாராம் வீதியில் ஜீப் வண்டி ஒன்றை சோதனையிட்ட போது அதிலிருந்து 30 ஹெரோயின் பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களை விசாரணை செய்த போது பத்தரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மேலும் 66 ஹெரோயின் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த பொதிகளில் இருந்து 103 கிலோ 950 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.