Home சினிமாகுறும்படங்கள், திரைப்படங்களை ஊக்குவிக்க வருகிறது டீக்கடை சினிமா விருது

குறும்படங்கள், திரைப்படங்களை ஊக்குவிக்க வருகிறது டீக்கடை சினிமா விருது

by admin

சிறந்த குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக டீக்கடை சினிமா விருது என்ற தலைப்பில் விருது வழங்கப்படுகிறது.  கலைஞர்களை ஊக்குவிக்க டீக்கடை சினிமா என்ற அமைப்பு சிறந்த குறும்படங்களைத் தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு குறும்படங்கள் மட்டுமில்லாமல், சிறந்த  திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கவுள்ளது.

முறைப்படி நடுவர்களை வைத்து தேர்ந்தெடுத்து படங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என முப்பது விருதுகளை வழங்குகிறது. இதில் சிறந்த திரைப்படங்களாக `தீரன் அதிகாரம் ஒன்று’, `மாநகரம்’, `அறம்’, `அருவி’, `ஒரு கிடாயின் கருணை மனு’, `குரங்கு பொம்மை’, `8 தோட்டாக்கள்’, `மரகத நாணயம்’ உள்ளிட்ட பல படங்களுக்கும், குறும்படங்களுக்கும் மற்றும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்j நிகழ்வை R.G.எண்டர்டெயின்மென்ட், கிரிஷ் மீடியாவும் நிஷான் மீடியாவும் இணைந்து நடத்துகின்றன.

திரையுலகின் சிறப்பு விருந்தினர் பலரும் பங்கேற்கவுள்ள இவ்விழா, வருகிற 11ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More