உலகம் பிரதான செய்திகள்

எகிப்தில் ஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு….

எகிப்தில் நாட்டில் ஒரே நாளில் இரு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 31 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு காவல்துறையினர் ஒருவரும் பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பிலேயே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

கொல்லப்பட்ட இருவரும் உயிரிழப்பதற்கு முன்பாக துப்பாக்கி குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட 18 பேரை தாங்கள் புலனாய்வு செய்து கண்டறிந்ததாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

விசாரணை முடிவில் அந்த 18 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இதே போன்று, அங்கு உள்ள மற்றொரு நகரமான இஸ்மாய்லியாவில் 2016-ம் ஆண்டு, ச சிறையில் இருந்து தப்பிய மத அடிப்படையிலான தீவிரவாதிகள் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து அங்குள்ள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

இவ்விரு வழக்குகளிலும் தண்டிக்கப்பட்டவர்கள், தங்கள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 9 other subscribers