பிரதான செய்திகள் விளையாட்டு

சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது


சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தான் அணி வைட் வோஷ் செய்துள்ளது. சிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்ற நிலையில் ஏற்கனவே நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் வென்று 4-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையேயான இன்று நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து, 365 ஓட்டங்கள் என்ற வெற்ற அலக்குடன் களமிறங்கிய சிம்;பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 233 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை சந்தித்தது.  இதையடுத்து, பாகிஸ்தான் அணி 5-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி சிம்பாப்வே அணியை வைட்வோஷ் செய்துள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.