இலங்கை பிரதான செய்திகள்

விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 3 மணித்தியாலம் விசாரணை


முன்னாள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டுமென அவர் உரையாற்றியமை தொடர்பிலேயே இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரையான 3 மணித்தியாலங்கள் விசாரணை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்போது, தான் ஐக்கிய தேசியக் கட்சியின் எழுச்சிக்காகவேயன்றி விடுதலைப் புலிகள் அமைப்பின் மீளெழுச்சிக்காக உரையாற்றவில்லை எனத் தெரிவித்துள்ள விஜயகலா மகேஸ்வரன் குறித்த உரை கடுமையானதொன்று என்பதனை உரையின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களின் போது உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • Ha ha nice twist Ya though our public were fools those who ever elected this lady as a parliamentarian as well appointed as a Minister as well. Hmmmm.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers