இலங்கை பிரதான செய்திகள்

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதோ ஒரு வகையில் உளவியல் பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளனர் (படங்கள்)

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் நீண்ட கால யுத்தத்துக்கு பின்னர் எதோ ஒரு வகையில் உளநல பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் குடும்ப நல பணியகத்தின் அனுசரணையுடன் ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவியுடன் மன நலம் தொடர்பான நடை பவனி (21-8-2018) இன்று காலை 8.30 மணியளில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.இதன் போது குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,

இந்த மக்களை உளநல ரீதியில் சுகதேகியாக்க தாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்கவில்லை. எனவே விரைந்து பணியாற்றி இவ்வாறான உளநல பிரச்சினையால் பாதிக்கப்படடவர்களை சமுதாய நிரோட்டத்தில் இணைப்பது முக்கியம் . உளநல ரீதியில் பாதிக்கப் பட்டவர்களுக்காக சிகிச்சை அளிப்பதற்காக இந்தியாவில் இருந்து தமிழ் தெரிந்த நிபுணர்களை அழைத்து வருவதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் ஏதோ வகையில் உளம் சார்ந்த பிரச்சினைக்கு உள்ளாகின்றார்கள். உடல் நோயை கவனித்து வரும் மக்கள் தங்கள் உளம் சார்ந்த பிரச்சினையை கவனிப்பதே இல்லை. இதனால் தற்கொலைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துள்ளது.எனவே மக்கள் மன நலம் மற்றும் உளவியல் சார்ந்த விடையங்களில் விழிப்புண்வு ஏற்ப்படுத்தும் வகையில் குறித்த நடை பவனி ஒழுங்கமைக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று (21) ஆரம்பிக்கபட்ட நடை பவனியானது ஆறு நாட்களாக நடை பெற்று (26-08-2018) ஞாயிற்றுக்கிழமை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடையும் வகையில் ஒழுங்கமைக்க பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலன் மற்றும் மன்னார் நகர சபை தலைவர் ஞ.அன்ரனி டேவிற்சன்
, குடும்ப நல பணியாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் , மாவட்ட செயலாக ஊழியர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.