Home உலகம் சீனாவில் பிரபல விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

சீனாவில் பிரபல விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

by admin

வடமேற்கு சீனாவில் உள்ள ஹார்பின் நகரில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளையில் 4 தளங்கள் கொண்ட விடுதியின் ஒரு தளத்தில் பற்றிய தீயானது ஏனைய தளங்களுக்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்ட 19 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More