இலங்கை பிரதான செய்திகள்

காங்கேசன்துறை கடற்பரப்பில் உடமையில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை கடற்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றுக்காவல்(ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகை மறித்து சோதனையிட்ட போது படகில் இருந்து 28 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கை சேர்ந்த இருவரையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் , மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளையும் காங்கேசன்துறை காவல்துறையினரிடம் நேற்றிரவு கடற்படையினர் ஒப்படைத்தனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.