உலகம் பிரதான செய்திகள்

எகிப்தில் பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதலில் 52 தீவிரவாதிகள் பலி


எகிப்தின் சினாய் பகுதியில் பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதலில் 52 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ள நிலையில் அவர்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல்களினை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளில் இடம்பெற்ற இந்த வன்முறைகளில் ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் , ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எகிப்து ராணுவம் மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap