இந்தியா பிரதான செய்திகள்

போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் :


புகையால் பாதிப்பு ஏற்படுவதால் போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் போகி பண்டிகை 14ம் திகதி கொண்டாடப்படவுள்ளநிலையில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

போகி பண்டிகை அன்று பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.

கடந்த ஆண்டு அதிக அளவு ஈரப்பதம், குறைந்த வெப்பநிலை மற்றும் குறைந்த அளவு காற்றின் வேகம் காரணமாக சென்னை மாநகராட்சி மண்டலங்களில் காற்றில் பி.எம்.10 துகள்களின் அளவு 135 முதல் 386 வரை மைக்ரோம் கனமீட்டர் என்ற அளவில் இருந்தது. இது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகும்.

போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.

எனவே இந்த ஆண்டு போகி பண்டிகைக்கு முன்தினம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 30 குழுக்கள் அமைத்து போலீசாருடன் இணைந்து அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் ரோந்து பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers