சினிமா பிரதான செய்திகள்

இந்தியன் 2விலிருந்து சிம்பு வெளியேற்றம்

 

இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமலுக்கு சிம்பு பேரனாக நடிப்பதாக  தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது, இப் படத்தில் சிம்பு நடிக்கவில்லை என்றும் சிம்புவுக்குப் பதிலாக சித்தார்த் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1996இல் கமல்ஹாசன் நடிக்க, இயக்குனர் சங்கர் இயக்கிய திரைப்படம் இந்தியன். தந்தை, மகன் என இரு வேறு பட்ட கதாபாத்திரங்களில் இப் படத்தில் கமல் நடித்தார். இலஞ்சம், ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இன்று வரையில் இப் படம் புகழ் பெற்று விளங்குகின்றது. இந்த நிலையில் 22 ஆண்டுகள் கமலும் சங்கரும் இணைந்து இந்தியன் 2 படத்தை உருவாக்க தயாராகி வருகின்றனர். இந்தப் படத்தில் கமலுக்கு நாயகியாக  காஜல் அகர்வால்  நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தப் படத்தில் இளம் கதாநாயகர் சிம்பு நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப் படத்தில் கமலுக்கு பேரனாக சிம்பு நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சித்தார்த் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப் படத்தின் படப்பிடிப்புக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.