குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பும் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் போதை மது ஒழிப்பு காப்பகம் என்பன இணைந்து புதுக்குடியிருப்பு 1 ம் வட்டார பகுதியில் நல்லிணக்க தைப்பொங்கல் நிகழ்வு ஒன்று (15.01.2019) இடம்பெற்றுள்ளது. .புதுக்குடியிருப்பு பகுதியில் வீடு ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்வில்.
வடக்கு கிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பு ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் போதை மது ஒழிப்பு காப்பகம் இலங்கையினை பாதுகாப்போம் என்ற அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பௌத்த துறவிகள் அடங்கலாக தென்பகுதியை சேர்ந்த மக்கள் முல்லைத்தீவு மக்கள் இணைந்து இந்த பொங்கல் நிகழ்வை நடத்தினர் .
வடக்கு கிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பின் தலைவர் தி.அருட்செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் போதை மது ஒழிப்பு காப்பகத்தின் தலைவர் பாகியங்கல ஆனந்த சாகர தேரர் மற்றும் அந்த அமைப்பின் அங்கத்தவர்கள் இலங்கையினை பாதுகாப்போம் அமைப்பின் தேசிய அமைப்பாளர் பாலித விக்கிரம ரத்ன உள்ளிட்ட தென்பகுதியை சேர்ந்தவர்கள் முல்லைத்தீவு மக்கள் என பலரும் கலந்துகொண்டு பொங்கல் பொங்கி தைபொங்கல் தினத்தை கொண்டாடினர்
Add Comment