இலங்கை பிரதான செய்திகள்

குரும்பசிட்டியில் 70 கிலோ கஞ்சா போதைப் பொருள் மீட்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுமார் 70 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை தோட்டக் காணி ஒன்றில் உலர வைத்தநிலையில் மீட்டுள்ளதாக பருத்தித்துறை   காவல்துறையினர் தெரிவித்தனர். கடற்படையினர் வழங்கிய தகவலுக்கு அமைய பருத்தித்துறை குரும்பசிட்டி பகுதியிலேயே இவ்வாறு இந்தக் கஞ்சா இன்று பிற்பகல் மீட்கப்பட்டது.
கஞ்சாவை உலர வைத்தவர்கள் யார் என்று அறியப்படாத நிலையில், தோட்டக் காணியின் உரிமையாளரான தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் காவல்துறையினர்  தெரிவித்தனர். மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடியே 5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.