குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடுக்கரை ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் அறநெறிப் பாடசாலைக்கான அடிக்கல் இன்று ஞாயிற்றுக்கிழமை (3) காலை நடப்பட்டது.
குறித்த அடிக்கல்லினை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.
நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தகுமார் தலைமையில் நடைபெற்றகுறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலர் சி.ஏ.மோகன்றாஸ், மேலதிக மாவட்ட செயலர் சி.குணபாலன், அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பிரத்தியேக செயலாளர்,மன்னார், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர்கள் கலந்து கொண்டனர்.
வீடமைப்பு நிர்மானத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் இந்தக் கட்டடம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment