பிரதான செய்திகள் விளையாட்டு

இந்திய பெண்கள் அணிக்கெதிரான 2வது இருபதுக்கு இருபது போட்டியில் நியூசிலாந்து வெற்றி


இந்திய பெண்கள் அணிக்கெதிரான 2வது இருபதுக்கு இருபது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றியீட்டியுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒக்லாந்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய பெண்கள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து 136 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து பெண்கள் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகள் இடையிலான 3-வதும் இறுதியுமான போட்டி ஹமில்டனில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers