உலகம் பிரதான செய்திகள்

எத்தியோப்பிய விமானம் விபத்து – 157 பேர் உயிரிழப்பு

கென்யா நோக்கி சென்ற எத்தியோப்பியா நாட்டு விமானம் இன்று விழுந்து நொருங்கி ஏற்பட்ட விபத்தில் அதில் பயணித்த 157 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 149 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 8 விமானப் பணியாளர்கள் என 157 பேருடன் பயணித்த எத்தியோப்பியா அரசுக்கு சொந்தமான 737 ரக போயிங் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வானில் உயர எழும்பிய அந்த விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்த நிலையில் தலைநகர் அடிடாஸ் அபாபாவில் இருந்து சுமார் 60 கிலோமீற்றா தூரத்தில் விமானம் விழுந்துள்ளது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers