இலங்கை பிரதான செய்திகள்

தெற்கில் இருந்து வடக்கு வரை பறந்த பந்தய புறாக்கள் சாதனை படைத்தன..

தெற்கில் இருந்து வடக்கு வரையில் பந்தய புறாக்கள் பறந்து சாதனை படைத்துள்ளன. மாத்தறை டொந்தர பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் புறா பந்தய போட்டி நடத்தப்பட்டன.

பந்தய புறாக்கள் கழகம் யாழ்ப்பாணம் (பபுகயா) கடந்த இரண்டு வருடகாலமாக புறா பந்தய போட்டிகளை நடாத்தி வருகின்றது. அந்நிலையில் இலங்கையின் மிக தூர போட்டியான “ட்ராகன் மவுத்” போட்டி யாழ்ப்பாணத்தில் பிரபல மகப்பேற்று மருத்துவ நிபுணரான கே. சுரேஷ்குமாரின் அனுசரணையுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தபப்ட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து , தரைவழி பாதையாக சுமார் 600 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ட்ராகன் மவுத் என்னும் பகுதிக்கு 100 பந்தய புறாக்கள் கொண்டு செல்லபட்டு , அங்கிருந்து புறாக்கள் விடுவிக்கப்பட்டன. அவை யாழ்ப்பாணத்தை நோக்கி பறக்க தொடங்கின.

அங்கிருந்து 400 கிலோ மீற்றர் வான் தூரத்தில் உள்ள யாழ்ப்பாணத்தை எட்டரை மணி நேரத்தில் வந்தடைந்து முதல் புறா சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து ஏனைய புறாக்களும் வந்து சேர்ந்தன.

குறித்த போட்டியில் முதலிடத்தை பிடித்த புறாவுக்கு ஒரு இலட்ச ரூபாய் பண பரிசிலும், பதக்கம் மற்றும் வெற்றி கேடயம் வழங்கப்படவுள்ளது. அத்துடன் , இரண்டாம் இடத்திற்கு 75ஆயிரம் ரூபாய் பண பரிசிலும் , மூன்றாம் இடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் பணபரிசிலும் மற்றும் பத்தாம் இடத்திற்குள் வந்த ஏனைய 7 புறாக்களுக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் பண பரிசிலும் வழங்கப்படவுள்ளன. என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.