வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் இன்று வெளியாகவிருந்த `அயோக்யா’ திரைப்படத்தின் வெளியீடு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் `அயோக்யா’ ஆகும். விஷால் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் விளம்பரப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், படம் இன்று திரைக்கு வரவிருந்தது.
எனினும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நேரத்தில் படத்தின் வெளியீட்ட நாளை பிற்போட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தயாரிப்பாளருடனான நிதிப் பிரச்சினை காரணமாக படம் தடைப்பட்டிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்கிரீன் சீன் மீடியோ நிறுவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment