பிரதான செய்திகள் விளையாட்டு

உலக கிண்ண கிரிக்கெட்டுக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 12-வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கிண்ணத்தினைக் கைப்பற்றும் அணிக்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

ஏதிர்வரும் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டியில் நடப்பு சம்பியனான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியதீவுகள் , நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஸ் , ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்தநிலையில் 46 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று அறிவித்துள்ளது. அந்தவகையில் உலக கிண்ணத்தினைக் கைப்பற்றும் அணிக்கு 28 கோடி ரூபாயும் 2-வது இடம் பெறும் அணிக்கு 14 கோடி ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#உலக கிண்ண   #கிரிக்கெட் #பரிசுத்தொகை  #worldcup #cricket

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.