Home இந்தியாஉத்தரபிரதேசத்தில் பேருந்து – டிராக்டர் மோதி விபத்து -5 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் பேருந்து – டிராக்டர் மோதி விபத்து -5 பேர் பலி

by admin

உத்தரபிரதேசத்தில் இன்று காலை பேருந்து ஒன்று டிராக்டர் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.  உத்தரபிரதேசத்தில் இன்று காலை பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமாக சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்து பவீதியின்; ஓரம் நின்றுக் கொண்டிருந்த டிராக்டர் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#உத்தரபிரதேசத்தில்  #பேருந்து  #விபத்து   #accident

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More