மஸ்கெலியா காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா ஸ்டொக்கம் தோட்டத்தில் 23.05.2015 அன்று மதியம் 16 வயது மதிக்கதக்க பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த தோட்டத்தின் வசிக்கும் ராமச்சந்திரன் ஆனந்தஜோதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மாணவியின் மரண விசாரணை தொடர்பில் மஸ்கெலியா காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை மேற்படி பாடசாலை மாணவி தூக்கிட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சடலத்தை மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலை மாணவி கடிதம் ஒன்று எழுதி வைத்துவிட்டு தனது வீட்டிலே தூக்கிட்டு கொண்டமை குறிப்பிடதக்கது
(க.கிஷாந்தன்)
#மஸ்கெலியா #பாடசாலை #மாணவி #தற்கொலை #suicide #student
Spread the love
Add Comment