பிரதான செய்திகள் விளையாட்டு

பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று போட்டிகளில் முன்னணி வீராங்கனைகளான நவோமி ஒசாகா, ஹாலெப் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

3-வது நாளான நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் , ஜப்பான் நாட்டை சேர்ந்த முதல்தர வீராங்கனையான நவோமி ஒசாகா, சுலோவாக்கிய வீராங்கனை அன்ன கரோலினா சிமிட்லோவாவை எதிர்கொண்டு 0-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அதேவேளை ருமேனியாவினைச் சேர்ந்த நடப்பு சம்பியனான சிமோனா ஹாலெப், அவுஸ்திரேலியாவின் டோம்ஜனோவிச்சை எதிர்கொண்டு 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

#Simona Halep #Naomi Osaka #french open tennis

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap