இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள்

தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலை படைப்பாளிகளுக்கான அரச விருது விழா..

 

  • தமிழ் கலைஞர்களை விண்ணபிக்க கோருகிறார் அமைச்சர் மனோ    

“தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் – கலைஞர்களுக்கான அரச விருது விழா – 2019”, என்ற தலைப்பில் இந்நாட்டு தமிழ் கலைஞர்களுக்கு விருதுகளையும்,மறுக்கப்படும் அங்கீகாரத்தையும், பணப்பரிசில்களையும் பெற்றுத்தந்து பாரம்பரிய மற்றும் நவீன தமிழ் கலைகளை ஊக்குவிக்கும் அரச விருது விழாவை நடத்துவிக்க தனது அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும், இந்த விருது விழாவில் விருதுகளை பெற நாடெங்கும் கலைப்பணியாற்றும் தமிழ் கலைஞர்கள் விண்ணப்பிக்க   வேண்டும் எனவும் ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியும், தேசிய ஒருமைப்பாடுஅரசகரும மொழிகள்சமூக மேம்பாடு,இந்து சமய விவகார அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் அமைச்சர் மனோ மேலும் கூறியுள்ளதாவது,

வருடாந்தரீதியாக நடத்துவிக்க தீர்மானிக்கபட்டுள்ள இந்த தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைஞர்களுக்கான அரச விருது விழாவின், இவ்வாண்டுக்கான  விருது விழா ஆகஸ்ட் 24ம் திகதி கொழும்பில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.   

இந்நாட்டு தமிழ் கலைஞர்களுக்கு விருதுகளையும்மறுக்கப்படும் அங்கீகாரத்தையும், பணப்பரிசில்களையும் பெற்றுத்தந்துபாரம்பரிய மற்றும் நவீன கலைகளை ஊக்குவிக்கும் வருடாந்த அரச விருது விழாவை நடத்துவிக்க எனது அமைச்சு அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை நான் வழங்கியுள்ளேன். இவ்விழாவை நடத்தும் பொறுப்புகளை தேசிய ஒருமைப்பாடுஅரசகரும மொழிகள்சமூக மேம்பாடுஇந்து சமய விவகார அமைச்சின் இந்து சமய கலாச்சார திணைக்களத்திற்கு வழங்கியுள்ளேன்.

எழுத்துபாடல்வாத்தியம்நாட்டியம்அறிவிப்புநெறியாள்கைபுகைப்படம்சினிமாகிராமியக்கலைகள்சிற்பம், நுண்கலைகள் ஆகிய மற்றும் இங்கே சொல்லப்படாத அனைத்து கலைத்துறைகளையும் சார்ந்த, 18 வயதிற்கு குறையாத அனைத்து மூத்தநடுத்தரஇளம் தமிழ் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிகளுக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.

இந்த விழாவிற்கான விண்ணப்பங்களை, கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய ஒருமைப்பாடுஅரசகரும மொழிகள்சமூக மேம்பாடுஇந்து சமய விவகார அமைச்சு தலைமையகம்கொழும்பு பம்பலபிட்டியில் அமைந்துள்ள இந்து சமய கலாச்சார திணைக்களம்பிராந்திய அலுவலகங்கள்மாவட்ட செயலகங்கள்பிரதேச செயலகங்கள் மற்றும் www.hindudept.govt.lk எனும் தளத்திலும், சமூக ஊடகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப இறுதி திகதி: 20-07-2019. விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய விலாசம்: பணிப்பாளர்இந்து சமய கலாச்சார திணைக்களம், 248-1/1 காலி வீதி. #ஜனநாயகமக்கள்முன்னண #அரசவிருதுவிழா #மனோகணேசன் #தமிழ்முற்போக்குகூட்டணி #ஜனநாயகமக்கள்முன்னணி

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.