Home உலகம் அமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

அமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

by admin


அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் நேற்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. 16.5 தொன் எடையுடைய இந்த கொக்கெய்ன் போதைப்பொருள் பிலடெல்பியா பகுதியில் கப்பலொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

7 கொள்கலன்களில் இருந்து மீட்கப்பட்டுள்ள குறித்த கொக்கெய்ன் போதைப்பொருள் தொடர்பில் பிலடெல்பியா பிராந்திய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கப்பல் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சந்தர்ப்பம் இதுவென அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கொக்கெய்ன் கைப்பற்றப்பட்ட கப்பல் கடந்த மாதம் சிலி, பெரு, கொலம்பியா மற்றும் பனாமா ஆகிய நாடுகளுக்கு பயணித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#koken drug #அமெரிக்க வரலாற்றில்   #கொக்கெய்ன் போதைப்பொருள்  #கைப்பற்றப்பட்டுள்ளது

 

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.