மட்டக்களப்பில் அமைந்துள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தினை கொரோனா வைரஸ் தடுப்பு முகமாக மாற்றப்பட்டுள்ளதனை கண்டித்து இன்றையதினம் கவனஈர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாடசாலையின் நுழைவாயிலை மூடியவாறு கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
´வேண்டாம் வேண்டாம் கொரோனா வேண்டாம்´, ´கொண்டு வராதே கொண்டு வராதே கொரோனாவை எங்கள் பிரதேசத்திற்கு கொண்டு வராதே´, ´இனரீதியாக அழிக்கும் முயற்சியை நிறுத்து – சிறுபான்மை மக்களை இலக்கு வைக்காதே´, ´எமது மாகாணத்தை அழிக்க நேசிக்கும் சதியை நிறுத்து – மக்களை காப்பாற்று´ என பல வாசகங்கள் ஏந்தியாவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இலங்கை செல்லும் பயணிகளை தனிமைப்படுத்தி சோதனைக்கு உட்படுத்த நடடிக்கைக்காக மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்தினை கொரோனா மத்திய நிலையமாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது #மட்டக்களப்பு #தனியார்பல்கலைக்கழகம் #கொரோனா #தடுப்புமுகம் #போராட்டம்
Add Comment