இலங்கை பிரதான செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட 174 பேர் கிளிநொச்சியில்


வெளிநாடுகளிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட 174 பேர் கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனா. இன்று காலை 5 பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் இரணைமடுவில் அமைந்துள்ள விமானப்படை முகாமில் வைத்து கொரோனா தொற்று குறித்து கண்காணிக்கப்படவுள்ளனர்.

இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து அழைத்துச்செல்லப்பட்டவர்கள் இலங்கையர்கள் எனவும், உலகில் காணப்படும் கொரோனா தொற்று காரணமாக அவர்களை 15 நாட்கள் குறித்த முகாமில்; வைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #வெளிநாடுகளிலிருந்து  #கிளிநொச்சி  #இரணைமடு  #கொரோனா

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap