சினிமா பிரதான செய்திகள்

ரிஷி கபூர் காலமானார்

பழம்பெரும் ஹிந்தி நடிகர் ரிஷி கபூர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இன்று காலமானார். 67 வயதான இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான இவர் அவரது தந்தை நடிப்பில் வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ (என் பெயர் ஜோக்கர்) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து 1973-ம் ஆண்டு பாபி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில் 2018-ம் ஆண்டு ரிஷி கபூருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதனையடுத்து அவர் கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பிய அவர் பின்னர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த ரிஷி கபூருக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அவர் மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று நடிகர் இர்பான் கான் மரணமடைந்த துயரத்தில் இருந்து மீளாத பொலிவூட் பிரபலங்களுக்கு ரிஷி கபூரின் மறைவு மேலும் கவலை அளித்துள்ளது.  #ரிஷிகபூர்   #ராஜ்கபூர்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap