இலக்கியம்

காலத்தின் வறுமை – ரவிச்சந்திரன் சாந்தினி


இறந்த காலத்தின் பிடியோ!!
நிகழ்காலத்தின் தொடர்ச்சி…
பிடிக்கப் பிடிக்க சறுக்குகின்றது..
காலத்தின் வறுமை!!!
மண்ணில் அமைதிகாணும் உறவுகளை
நினைவாய், உணர்வாய், தெளிவாய், விம்பமாய்
காட்டுகிறது காலத்தின் வறுமை!!!
காலை சூரியனுக்கு முகம்காட்டி நின்றால்..
முகத்தில் ஏதோ இருள் சூழ்ந்து விடுகிறது..
காலத்தின் வறுமை!!!
அழுகையும் விம்மலும்
சூழ்ந்தநிலை
ஏழேழுஜென்மமாய் மாறாத துக்கமும் ..
படிவுகளான மெளனம் இருட்திட்டு..
காலத்தின் வறுமை!!!
உலகம் இன்று வறுமையுற்றுள்ளது..
பானையில் இருந்தால்தான்
அகப்பையில் வரும்.. ஆதலால்
உதவும்கரங்களைநீட்டி
ஒருபிடி அன்பு செய்வீரா??
காலத்தின் வறுமை!!!!
துன்புறுவோரின் காற்தூசியையும்
கழுவி விடும் அன்பின் ஊற்று..
ஆர்ப்பரிக்கும் கடலலையாய்..
ஓயாது உங்களது பணிகள் தொடரட்டும்..
காலத்தின் வறுமை!!!!
கொதிக்கும் இந்தவையகம்
கண்ணீரால் சதா ஈரமாகும் இரவுகள்
எதையும் வைத்துச்செல்ல
காலம் காட்டியது
காலத்தின் வறுமை!!!!
கேள் ,
அறிவின் பசியில்..
அலையும் உயிர்…நான்
காலியாய் உள்ள எனது கிண்ணம்
நிறைதல் வேண்டும்..
அதுவரை நான் ஓயமாட்டேன்..

ரவிச்சந்திரன்சாந்தினி
நுண்கலைவிசேடகற்கை
கிழக்குப்பல்கலைக்கழகம்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.