
யாழ்.நல்லூர் பிரதேசசபையின் எல்லைக்குள் இன்றிலிருந்து பொது இடங்களில் மரக்கறிகள் மற்றும் மீன் வியாபாரத்திற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த. தியாகமூர்த்தி தெரிவித்தள்ளார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
எமது மக்களும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி சந்தைக்கு வியாபரிகளும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். வியாபாரிகளும் தங்களின் சந்தை வியாபார நடவடிக்கைகளை வழமைபோல முன்னெடுத்து வருகின்றனர்.
எனவே இன்றிலிருந்து வீதிகளில் மரக்கறிகள், மீன்கள் விற்பனை செய்ய முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்தார். #வீதியோர #வியாபாரத்திற்கு #நல்லூர்பிரதேசசபை #தடை #கொரோனா
Add Comment