இலங்கை பிரதான செய்திகள்

ஓமந்தை மாணிக்கர் வளவு வீடொன்றில் இரட்டைக் கொலை…

வவுனியா ஓமந்தை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியின் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை காவற்துறையினர் தலையில் பாரிய வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவரான 40 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான கோபால் குகதாசன் மற்றும் கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த 34 வயதுடைய சிவனு மகேந்திரன் ஆகிய இருவரும் மரணமடைந்ததாக காவற்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுப்பிரமணியம் சிவாகரன் என்ற நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் மாணிக்கர் வளவில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் ஓமந்தைக் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap