இலங்கை பிரதான செய்திகள்

கொரோனா -14,285 போ் பாதிப்பு – 36 போ் உயிாிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்றைய தினம் 356 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய இதுவரை 14,285 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று கந்தானை பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவா் கொரோனாவினால் உயிாிழந்துள்ள நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 595 பேர் நேற்று குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,880 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தொற்றுக்குள்ளானோரில் 5,370 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #கொரோனா #இலங்கை #உயிாிழப்பு #சுகாதார

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap