முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தை பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்று (20.11.20) இரவு வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டு அங்கு வைத்திய பரிசோதனையின் பின்னர் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. #சிவாஜிலிங்கம் #வல்வெட்டித்துறை #பாம்புதீண்டியது