
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட நிலையில் அதனை மீள அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த வெள்ளிக்கிழமை (08) இரவு துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய இடித்தழிக்கபட்டது.
அதனை அடுத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மீள புதிதாக தூபி அமைக்க துணைவேந்தர் இணக்கம் தெரிவித்ததை அடுத்து கடந்த திங்கட்கிழமை (11) காலை ஏழு மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது.
அதனை அடுத்து புதிய தூபி அமைப்பதற்காக கடந்த புதன்கிழமை (13) மாணவர்களின் மேற்பார்வையோடு பொறியியலாளர், பல்கலைக்கழக கட்டட பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை பிரிவினரால் நில அளவுத்திட்ட பிரமாணங்கள் போன்றன கணிக்கப்பட்டன.
இந்நிலையில் இன்றைய தினம் தூபி அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. #யாழ்_பல்கலை #முள்ளிவாய்க்கால்_நினைவுதூபி #ஆரம்பம் #துணைவேந்தர்

Add Comment