Home இலங்கை செம்மணியில் மீட்கப்பட்ட பொதிக்குள் ரிஎன்ரி, சி4 வெடிமருந்துகள்

செம்மணியில் மீட்கப்பட்ட பொதிக்குள் ரிஎன்ரி, சி4 வெடிமருந்துகள்

by admin

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்துகள் சுமார் 5 கிலோ கிராம் மீட்கப்பட்டன என்று காவல்துறையினா் தெரிவித்தனர்.

செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானம் இன்று அதிகாலை படையினரால் தேடுதலுக்கு உள்படுத்தப்பட்டது.

இன்று அதிகாலை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்து மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்துகள் கண்டறிப்பட்டது.

அது தொடர்பில்  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கையிடப்பதையடுத்து , நீதிமன்ற உத்தரவில் சிறப்பு அதிரடிப்படையினரால் வெடிமருந்து அடங்கிய பொதி மீட்கப்பட்டது.

அதனுள்  3 கிலோ 750 மில்லிக்கிராம் சி4 மற்றும் ரிஎன்ரி வெடிமருந்துகள் டெட்டனேற்றர்கள் அதற்கான வயர்கள் என்பன மீட்கப்பட்டன என்று காவல்துறையினா்தெரிவித்தனர். #செம்மணி #மயானம் #ரிஎன்ரி #வெடிமருந்துகள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More