இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.மாநகர சபையின் காவல்படை கடமைகளை ஆரம்பித்தது

யாழ்.மாநகர சபையின் காவல் படை இன்று புதன்கிழமை முதல் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.  யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் எண்ணக்கருவில் மாநகர சபை காவல் படை உருவாக்கப்பட்டுள்ளது. 


யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல் , ஒழுங்கு விதிகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறைகளை கண்காணித்தல் என்பவற்றுடன் , அவற்றை மீறுபவர்களுக்கு அவ்விடத்தில் தண்டப்பணம் அறவிடும் பணிகளை மேற்கொள்ளும். 
மாநகர சபையின் சுகாதார பணிமனையில் பணியாற்றும் உத்தியோகஸ்தர்கள் 5 பேர் இவ் காவல் படைக்கு உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான புதிய சீருடைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link