இந்தியா பிரதான செய்திகள்

முன்னாள் அழகிகள் இருவா் விபத்தில் பலி

கேரளாவைச் சோ்ந்த முன்னாள் அழகிகள் இருவா் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் உயிாிழந்துள்ளனா். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் அன்சி கபீர் (வயது 25). கடந்த 2019-ஆம் ஆண்டு கொச்சியில் நடந்த மிஸ் கேரளா அழகிப் போட்டியில் முதலிடம் பிடித்திருந்தாா்.

அவரது தோழியான திருச்சூரை சேர்ந்தவரான ஆயுர்வேத வைத்தியரான அஞ்சனா சாஜன் (26). என்பவரும் ம் 2019-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் கேரளா அழகி போட்டியில் பங்கேற்று 2-ம் இடம் பிடித்திருந்தாா்.

குறித்த தோழிகள் இருவரும் மேலும் இரண்டு நண்பர்களும் இன்று அதிகாலை 1-மணி அளவில் எர்ணாகுளம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது எர்ணாகுளம் தேசிய நெடுஞ்சாலையில் காருக்கு முன்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுவதனை தவிா்ப்பதற்காக காரை ஓட்டிச் சென்ற அன்சி கபீர் காரை திருப்பிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதில் காரில் இருந்த நால்வரரும் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்களை பரிசோதித்த மருத்துவார்கள் அன்சி கபீர் மற்றும் அஞ்சனா சாஜன் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

காரில் இருந்த ஏனைய இருவரும் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருவதாகவும் . இந்த விபத்து தொடர்பாக எர்ணாகுளம் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.