
யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்தை ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் 2 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவருக்கு ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் உள்ள நீதவான் நீதிமன்றுகளால் திறந்த பிடியாணைகள் ஐந்து காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் தாங்கள் பளைப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்தே போதை பொருளை பெற்றுக் கொள்வதாக ஆரம்பகட்ட விசாரணையில் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட நபர்களை யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை காவல்துறையினா் முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love
Add Comment