பளை – இத்தாவில் பகுதியில் வீடு ஒன்றின் முற்றத்தில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. முற்றத்தில் பச்சை நிற சீருடைத் துணி ஒன்றினை அவதானித்த வீட்டு உரிமையாளர் அவ்விடத்தினை தோண்டிய போது வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்தாா்.
இதனையடுத்து உடனடியாக பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிபடையினர் தோண்டப்பட்ட குழியினுள் இருந்து வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளனர்.
02 கைக்குண்டுகள் மற்றும் 175 தோட்டா ரவைகள் 01 மகசின் என்பன மீட்கப்பட்டுள்ளது எனவும் அவை யுத்த காலத்தில் பயன்படுத்திய அவை செயலிழந்துள்ளன எனவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்
Spread the love
Add Comment