குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாக்களிப்பார் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவ்வாறு இன்றி தோல்வியடையக்கூடிய வாக்கெடுப்புக்களில் மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நாமே அறிவித்தோம் என குறிப்பிட்டுள்ள அவர் மிகவும் முக்கியமான வாக்கெடுப்பின் போதே அவர் வாக்களிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மஹிந்த வாக்களிப்பார் – உதய கம்மன்பில
170
Spread the love