குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெலிமட குருதலாவ பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற மீலாத் நபி விழாவில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வானொலியில்இ தொலைக்காட்சியில் அல்லது பத்திரிகையில் சொல்லப்படும் விடயங்களை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்ற போதிலும் இணைய தளங்களை கட்டுப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சமூக ஊடக வலையமைப்புக்களில் எந்த கெட்ட விடயத்தையும் காண்பிக்கவும் சொல்லவும் முடிகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் முதலில் இணைய ஊடகங்களுக்கு தெளிவூட்டப்படும் எனவும் அவ்வாறு கட்டுப்படாவிட்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.