299
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமேன வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
மாகாண அபிவிருத்தி சார்ந்த அதிகாரங்கள் பெரும்பாலும் மத்திய அரசாங்கத்திடமே இருக்கிறது. காணி உள்ளிட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பகிர மறுப்பதால், இது சார்ந்த பிரச்சினைகளுக்கு மாகாண சபைகளால் தீர்வு காண முடியாத நிலை காணப்படுகிறது என்று விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love