174
இலங்கையிலுள்ள மாவட்டச் செயலகங்களுக்கிடையே நடாத்தப் பெற்ற தேசியத் திறன் போட்டியில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் இரண்டாம் இடத்தினைப் பெற்ற நிலையில் அதற்கான வெற்றிக் கேடயத்தினை இன்று 14.12.2016 கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதியிடமிருந்து கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் மாவட்டச் செயலகத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பங்குகொண்டனர். வடமாகாணத்தில் தேசியத் திறன் போட்டியில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முதற்தடவையாக இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love