178
மட்டக்களப்பு கரடியனாறு காவல் நிலையத்திற்கு அண்மையில் அதிசக்தி வாய்ந்த கிளைமோர் கண்ணிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கரடியனாறு காவல் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள விவசாயப் பண்ணை வீதி புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் குறித்த கண்ணிவெடியை அவதானித்து காவல்துறையினருக்கு வழங்கிய தகவலினைத் தொடர்ந்து குறித்த கிளைமோர் கண்ணிவெடி மீட்கப்பட்டுள்ளது.
இக் கண்ணிவெடி சுமார் 30 கிலோகிராம் நிறையுடையது எனவும் இது பாரிய வாகனங்களை அழிக்கக்கூடிய வல்லமை கொண்டதெனவும் வெடிபொருள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Spread the love