Home இலங்கை இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலின் கிளிநொச்சி முடிவுகள் வெளியானது

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலின் கிளிநொச்சி முடிவுகள் வெளியானது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

225 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் இன்று  நடைபெற்றது.  கிளிநொச்சி மாவட்டத்தில் 19 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். மாவட்டத்தில் மொத்தம் 3876 வாக்காளா்கள்  ஜந்து வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்தனர். இதன்போது பச்சிலைப்பள்ளி பிரதேசத்தைச் சோ்ந்த  கந்தையா விஜயரூபன் 329 வாக்குகளைப் பெற்று இளைஞா் பாராளுமன்ற உறுப்பினராக தொிவு செய்யப்பட்டுள்ளாா்

கண்டாவளைப் பிரதேச செயலகத்தில் நான்கு வேட்பாளர்களும் கரச்சி பிரதேச செயலகத்தில் ஐந்து  வேட்ப்பாளர்களும் ,பூநகரி பிரதேச செயலகத்தில் நான்கு வேட்பாளர்களும் ,பச்சிலைப்பள்ளி  பிரதேச செயலகத்தில் ஆறு  வேட்ப்பாளர்களும்   போட்டியிட்ட நிலையிலும்  பச்சிலைப்பள்ளி பிரதேச  செயலக இளைஞர்களின்  ஒற்றுமையினால்  குறித்த  பிரதேச செயலக பிரிவைச்  சேர்ந்த  கந்தையா விஜயரூபன் என்ற  வேட்பாளருக்கு  குறித்த பிரதேச செயலகத்திலையே  329 வாக்குகளை  வழங்கி வெற்றி அடையச்செய்துள்ளனர்.

மற்றைய பிரதேச செயலகங்களில் ஏற்பட்ட  கடும் போட்டி காரணமாக  வாக்குகள் பிரிவடைந்த நிலையில்  மற்றைய  வாக்காளர்களை விட  இவர்  அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்

அத்துடன்  வெற்றி  ஈட்டியவர்களுக்கான      முதலாவது இளைஞர்  பாராளுமன்ற  அமர்வு  2017  ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில்     மகரகமையில் அமைந்துள்ள இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More