176
சிரியா, அலெப்போவின் கிழக்கு பகுதியிலிருந்து ஒரு வாரத்தில் 25,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்றைய தினம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செய்திகளின் அடிப்படையில் அலெப்போவின் கிழக்கு பகுதியிலிருந்து திங்கட்கிழமை மட்டும் 15,000 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் கடந்த ஒரு வாரத்திலிருந்து இதுவரை 25,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் ஆயிரம் பேர் அலெபோவின் கிழக்கு பகுதியில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
Spread the love