161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பௌத்த மதத்திற்கு உரிய இடத்தை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை இல்லாமல் செய்யும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களும் பிரச்சாரங்களும் பொய்யானவை என குறிப்பிட்டுள்ள அவர் சில கடும்போக்குவாதிகள் மக்களை பிழையாக வழிநடத்துகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு சென்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love
1 comment
பௌத்த மதத்திற்கு உரிய இடத்தை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும், என்று கூறும் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, தான் செங்கலடி பகுதியிலுள்ள பழமை வாய்ந்த பௌத்த வழிபாட்டுத் தலமொன்றுக்குச் சென்றதாகவும், அங்கு அவ்வழிபாட்டுத் தலம்(பௌத்த விகாரை) அமைந்த காணியின் உறுதிப்பத்திரம் முஸ்லிம் ஒருவரால் தமிழர் ஒருவருக்கு விற்கப்பட்டு புல்டோசர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, அங்கிருந்த விகாரை பாதியளவில் அழிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறுகின்றார்!
அமைச்சர் திரு. விஜேதாச ராஜபக்ஷவை, பொதுபலசேனா மற்றும் ராவணா பலய போன்ற அமைப்புக்களை வழிநடத்தும் இனவெறி பிடித்த தேரர்களுக்கு நிகராகவே நான் பார்க்கின்றேன்! நீதியமைச்சராக இருந்துகொண்டு இனவெறிக் கருத்துக்களை உதிர்க்கும் இவர், நல்லாட்சிக்கு ஒரு களங்கமேயென்றால், அது மிகையில்லை?
இந்நிகழ்வில் காணப்படும் நியாயம் குறித்து நீதியமைச்சரான அவரே கூறும்போது, அந்நிகழ்வு எப்படி அநீதியான செயலாக முடியும்? குறித்த காணி இஸ்லாமியருக்குச் சொந்தமானது என்பதையும், அது ஒரு தமிழருக்கு விற்கப்படுகின்றது என்பதையும் நீதியமைச்சர் ஒப்புக் கொள்கின்றார்? அந்தக் காணி உண்மையாகவே தொல்பொருள் பிரதேசமென்றால் அக் காணியை இஸ்லாமியரிடமிருந்து அரசன்றோ வாங்கியிருக்க வேண்டும்? வடக்கில் இன்று தனியார் காணிகளில் அத்துமீறிக் கட்டப்படும் பௌத்த விகாரைகள் இடிக்கப்பட நேர்ந்தால் அவற்றையும் சிங்கள அரசுகள் இப்படித்தானே கூறும்? இதிலென்ன நியாயம் இருக்கின்றது?
இவர்களின் கருத்தை நியாயப்படுத்தும் ஜனாதிபதி, அதற்கான நடவடிக்கைகளில் இறங்க இருப்பதானது, அவரை நம்பும் சிறுபான்மையினருக்கு அவர் செய்யும் துரோகமன்றி வேறென்ன?