மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்தெடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மேலும் மாகாண சபைகள்; வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்;கு அரசியல் யாப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முதலமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஹாபிஸ் நசீர் அஹமட் இவ்வாறு கூறியுள்ளார்
தற்போது வெளியிடப்பட்டுள்ள விசேட அபிவிருத்திகள் சட்டமூலம் தொடர்பில் பிரதமர் விளக்கமளித்தாகவும் குறித்த சட்டமூலம் அபிவிருத்திகளை துரிதப்படுத்தவே கொணடுவரப்பட்டுள்ளதுடன் அது அதிகாரங்களை ஒருவருக்கு வழங்கும் திவிநெகும போன்ற சட்டமூலங்கள் போல் அமையாது என பிரதமர் தெரிவித்ததாகவும் கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மாகாண சபைகளுக்கு காணி மற்றும் நிதி உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அதிகாரப் பகிர்வை துரிதப்படுததுவதன் ஊடாகவே இவை சாத்தியப்படும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.