காவல்துறை செய்திகளை தனியார் ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாள் தோறும் தனியார் ஊடகங்களுக்கு காவல்துறை சார் செய்திகள் அனுப்பி வைக்கப்படும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் ஊடாக இவ்வாறு செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இனிவரும் காலங்களில் நாள் தோறும் காவல்துறை செய்திகள் அரச ஊடகங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
ரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் காவல்துறை மா அதிபர் தொலைபேசி அழைப்பு ஒன்றுக்கு பதிலளித்த விடயம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டிருந்தன.
காவல்துறை தலைமையகத்தில் நடைபெறும் எந்தவொரு நிகழ்விற்கும் தனியார் ஊடகப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பிரதிக் காவல்துறை மா அதிபர் ருக்மல் கொடிதுவாக்கு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இது குறித்து பேசி இறுதித் தீர்மானம் ஒன்றை காவல்துறை மா அதிபர் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1 comment
காவல்துறை செய்திகளை தனியார் ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் எனக் கூறும் காவல்துறை மா அதிபர் திரு. பூஜித ஜயசுந்தர, அதற்காகக் கூறும் காரணம்தான் வேடிக்கையாக இருக்கின்றது?
ரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இவர் முட்டாள் தனமாக தொலைபேசி அழைப்பு ஒன்றுக்கு பதிலளித்த விடயம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டிருந்தமையானது, இவருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்திவிட்டது போலும்?
மேடை ஏறி வாய் கிழிய ஊடக சுதந்திரம் குறித்துக் கதையளக்கும் நல்லாட்சி அரசில், இது என்ன நீதி- நியாயமோ, யாரறிவார்?